மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு முகாம்
தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வயது வரம்பு தளர்வு செய்து பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு முகாம் நடைபெற்றது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரங்கள் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.