முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

Update: 2022-11-06 19:09 GMT

அனைத்து மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கேசவ ராஜன் தலைமை தாங்கினார். முருகேசன் வரவேற்று பேசினார். முரளி, ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கேட்டு பெறுவது, கேண்டீன் உள்ளிட்ட வசதிகள் இல்லாத மாவட்டங்களில் அதை ஏற்படுத்த கூறுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்