முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் சி.கொத்தங்குடியில் அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் எம்.ராதா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோபு, ராஜேந்திரன், தங்கராஜ், சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய ராணுவத்தை பற்றியும், ராணுவ வீரர்கள் பற்றியும் தவறாக பேசிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை சரவணன் என்பவரை கண்டிப்பது, கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தில் இந்திய ராணுவத்தில் பணி புரிந்த பிரபு என்பவரை கொலை செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சோமசுந்தரம், ராஜேந்திரன், பாவாடை சாமி, ஆதித்தம், திருவரசு, ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.