கள்ளக்குறிச்சியில்முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-27 18:45 GMT


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், உதவி இயக்குனா் (முன்னாள் படைவீரர் நலன்) கர்னல் அருள்மொழி, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் விஜயகுமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், அவரது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்