முன்னாள் துணை ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் முன்னாள் துணை ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-02 19:45 GMT

முன்னாள் துணை ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் கருணாகரபாண்டி, இணை செயலாளர் பாலையா, மதுரை மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், ஒரு பதவி ஒரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் கொடிநாள் விழா, கேண்டீன்களில் 50 சதவீத ஜி.எஸ்.டி. வரி விலக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கான பட்டியலில் முன்னாள் துணை ராணுவ வீரர்களை சேர்த்தல் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்