எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்துபள்ளி ஆண்டு விழா

எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-04-16 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் கதிர்வேல், பள்ளி தாளாளர் சுபாஷ் பாபு சிங், பேரூராட்சி கவுன்சிலர் தங்கம்மாள் கல்லடி வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் லால் பகதூர் கென்னடி வரவேற்று பேசினார். பள்ளி ஆசிரியை அன்புத்தாய் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர்கள் முத்தம்மாள், பத்மாவதி ஆகியோர் பரிசுகள் வழங்கினர். விழாவில் பள்ளி துணை தலைவர் அஹமது ஜலால் பைஜி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஹரிஹரசுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது 

Tags:    

மேலும் செய்திகள்