ஈரோடு வ.உ.சி.பூங்காஈத்கா மைதானத்தில் நாளை ரம்ஜான் சிறப்பு தொழுகைஏற்பாடுகள் தீவிரம்

ஈத்கா மைதானத்தில் நாளை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடக்கிறது.

Update: 2023-04-20 20:16 GMT

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை ஈகைத்திருநாளாக முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு இருந்து ரம்ஜான் கொண்டாட்டத்துக்கு தயாராக இருக்கிறார்கள். 30 நாட்களும் புனித குரானின் வசனங்களை படித்தும், ஏழைகளுக்காக பொருள் ஒதுக்கி வைத்தும் நோன்பு கடைபிடித்து வரும் முஸ்லிம்கள் தாங்கள் சேமித்த பொருள் அல்லது பணத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்கும் ஈகைத்திருநாளாக ரம்ஜான் உள்ளது. இதையொட்டி வழக்கம்போல ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஈத்கா மைதானம் புதுப்பிக்கும் பணி நடந்தது. தற்போது தொழுகைக்கான பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் 40 ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற இருக்கிறது. ஈரோடு வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடக்கிறது. இதில் ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள 240 பள்ளி வாசல்களிலும் தொழுகை நடத்தப்படும். இதுதவிர பொதுவான பகுதிகளாக சுமார் 1000 இடங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்