ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில்ஒப்பந்த பணியாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

Update: 2023-02-01 20:52 GMT


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஈரோட்டில் பணி வழங்காமல், பவானி, கோபி, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். ஒப்பந்த பணியாளர்களுக்கு ஈரோட்டிலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்