ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில்2-வது நாளாக கொரோனா தடுப்பு ஒத்திகை

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது.

Update: 2023-04-12 00:40 GMT

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது.

ஒத்திகை நிகழ்ச்சி

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மெதுவாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டு தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் நாடு முழுவதும் 2 நாட்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2-வது நாளாக நேற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முதலுதவி சிகிச்சை

இதில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளியை அழைத்து வருவது, அங்கிருந்து கொரோனா வார்டுக்கு 'ஸ்ட்ரெக்சரில்' நோயாளியை வார்டுக்குள் அழைத்து சென்று படுக்கையில் அனுமதிப்பது போன்ற ஒத்திகை நடத்தப்பட்டது.

அப்போது அந்த வார்டில் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் முழுகவச உடையை அணிந்து இருந்தனர். நோயாளி அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு ஆக்சிஜன் பொருத்தப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பதைபோல் ஒத்திகை நடந்தது. மேலும், நோயாளிகளின் விவரங்களை சேகரிப்பது, முதல்கட்ட சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து செவிலியர்களுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்