தையல் கலைஞர்களுக்கு உபகரணங்கள், சீருடை வழங்கும் விழா

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தையல் கலைஞர்களுக்கு உபகரணங்கள், சீருடை வழங்கும் விழா நடந்தது.

Update: 2022-10-03 18:45 GMT

வந்தவாசி

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தையல் கலைஞர்களுக்கு உபகரணங்கள், சீருடை வழங்கும் விழா நடந்தது.

வந்தவாசியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இலவச தையற்கலை பயிற்சி மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா டி.எம்.பீர்முகமது தலைமையில் நடைபெற்றது. பயிற்சி நிறுவனர் பீ.ரஹ்மத்துல்லா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு தையல் உபகரணங்களையும், சீருடைகளையும் தையல் பயிற்சி பெறும் 120 மாணவிகளுக்கு வழங்கினார்.

விழாவில் நகர மன்ற தலைவர் ஜலால், துணை தலைவர் அன்னை சீனுவாசன், நகரச் செயலாளர் தயாளன், டாக்டர் கோகுலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பயிற்சி ஆசிரியர் ர.ஆசியாபர்வீன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்