உடையார்பாளையம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
உடையார்பாளையம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். உடையாபாளையம் (பொறுப்பு) செயல் அலுவலர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னதாக சர்க்கரை பொங்கல் வைத்து செங்கரும்பு, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வணங்கினர். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி எழுத்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.