சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சமத்துவ பொங்கல்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். மாணவர் மரேஸ் ஜான் ஜேசு வரவேற்று பேசினார். மாணவி மகாலட்சுமி அறிமுக உரையாற்றினார். பின்னர் பொங்கலிடுதல் மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் உமா சிறப்புரையாற்றி, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாணவர் சாரதிகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி உதவி பேராசிரியர் செல்வகுமார், பி.பி.எட். முதலாமாண்டு மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

நர்சிங் கல்லூரி

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் மாணவ செவிலியர் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், மாணவிகள் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சிகளை, மாணவ செவிலியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுமதி மற்றும் 4-ம் ஆண்டு மாணவிகள் தொகுத்து வழங்கினர்.

குலசேகரன்பட்டினம்

குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்தில் நடந்த விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் சொர்ணபிரியா துரை தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாம்பாள், பஞ்சாயத்து துணை தலைவர் கணேசன் ஊராட்சி செயலாளர் அப்துல் ரசாக் ரசூல்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இதேபோல் குலசேகரன்பட்டினம் பண்டார சிவன் செந்தில் ஆறுமுகம் நடுநிலைப்பள்ளியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் சொர்ணபிரியா துரை, உடன்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ராஜதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் சுபாஷ் சந்திரபோஸ், நூலகர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம் புனித ஜோசப் சேவியர் ஆர்.சி. தொடக்க பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் வண்ணக்கோலமிட்டு பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி ஆசிரியைகள் லில்லி வசந்தி, பிரமிளா, ஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடன்குடி

உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு ஒன்றிய குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, ஒன்றிய குழு துணைத்தலைவர் மீராசிராஜூதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு தலைவி ஹூமைரா அஸ்ஸாப் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் செயல் அலுவலர் பாபு மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். குலசேகரன்பட்டினம் பி.ஏஸ்.எம். பள்ளி, கல்லாமொழி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை பங்கேற்று பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதலூர்-எட்டயபுரம்

முதலூர் ஊராட்சியில் நடந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன் முருகேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மீனா முருகேசன், ஒன்றிய மேற்பார்வையாளர் ராஜேஷ், மகளிர் கூட்டமைப்பு தலைவி ஜெபா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சர்க்கரை பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், எட்டயபுரம் நகர தி.மு.க. செயலாளர் பாரதி கணேசன், தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதேபோல் எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கீழ ஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சை பாண்டியன் இனிப்புகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்