சமத்துவ எருதுகட்டு விழா

சமத்துவ எருதுகட்டு விழா

Update: 2023-05-20 18:54 GMT


திருப்புல்லாணி யூனியன் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 57-ம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா நடைபெற்றது. இந்த சமத்துவ எருதுகட்டு விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக காளைகளின் கழுத்தில் வடமாடு கயிறு கட்டப்பட்டு மைதானத்தை சுற்றி வந்தன. மைதானத்தை சுற்றி வந்த மாடுகளை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். ஆனால் மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் மாடுகள் ஒவ்வொன்றும் திமிறியபடி மைதானத்தை சுற்றி வலம் வந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட காளைகள் இந்த சமத்துவ எருது கட்டு விழாவில் கலந்து கொண்டன. எருதுகட்டு விழாவில் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்தர், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எருதுகட்டு விழாவில் வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்