காவல்துறை சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

குடியாத்தத்தில் காவல்துறை சார்பில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-13 17:59 GMT

குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ரவி உள்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஊட்டிய, அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கர் பிறந்தநாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டோம் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்போம் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்