சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்

மோத்தக்கல் கிராமத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-01-18 15:47 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே மோத்தக்கல் கிராமத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் மாணவிகள் கிராமத்தில் தங்கி விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

நேற்று மாணவிகள் ரவீணா, ரேஷ்மா, சாமிலி, சங்கவி உள்ளிட்டவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் உஷாஜெயவேலு தலைமை தாங்கினார்.

ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பிரசாரம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்