கடல் வழி போக்குவரத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்

கப்பல் வழி போக்குவரத்தால் சாலை வழி போக்குவரத்தில் ஏற்படும் நெரிசல் குறையும். கப்பல் போக்குவரத்தில் செலவு குறைவு. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்

Update: 2023-01-18 18:45 GMT

கப்பல் வழி போக்குவரத்தால் சாலை வழி போக்குவரத்தில் ஏற்படும் நெரிசல் குறையும். கப்பல் போக்குவரத்தில் செலவு குறைவு. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். கப்பலின் மூலம் பயணம் செய்தால் புதுவிதமான அனுபவமாக இருக்கும்.

பண்டிகை காலங்களின் போது பஸ், ரெயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். சிலர் டிக்கெட்டுகள் கிடைக்காமல் சொந்தஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். இனி கடல் போக்குவரத்தை தொடங்கினால்தான் மக்களுக்கு பயணம் எளிமைப்படும்.

பயணிகள் கப்பல் போக்குவரத்தால் நாட்டுக்கு வருமானத்தை தேடி தரும். இதன் மூலம் பல்வேறு சிறு, சிறு துறைமுகங்கள் சீரமைக்கப்பட்டு கடல் சார்ந்த நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி அடையும். எனவே இது போல் அரசும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கப்பல் பயணத்தை தொடங்கினால் தமிழக மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் அரசுக்கும் போதிய வருமானம் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்