பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

ஒகேனக்கல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.;

Update:2023-01-29 00:15 IST

பென்னாகரம்

கணக்கெடுக்கும் பணி

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியானது ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு சுற்றுச்சூழல் கழக மாணவர்கள், ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சரக அலுவலர்களுடன் ஒகேனக்கல் பகுதியில் பல்வேறு வகையான பறவை இனங்கள் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தினர்.

எண்ணிக்கை அதிகரிப்பு

இதில் 2020-ம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது பறவையினங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இந்த கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இப்பகுதிகளில் தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை கூடியிருப்பது இயற்கை ஆர்வலர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்ச்சியை ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார், பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் மற்றும் நெருப்பூர் வனச்சரக அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்