பேட்டை:
பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் தொழில் முனைவோர் திறன் மேம்பாடு செயல்முறை பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆங்கிலத்துறைத் தலைவர் கலைவாணி வாழ்த்துரை வழங்கினார். மாணவிகள் இனிப்பு வகைகள், சாட், பிரட்கார்ன் வகைகள், குளிர்பானங்கள், செடி, மரக்கன்றுகள், ஆடை அலங்கார கைவினைப்பொருட்கள் உள்பட 15 ஸ்டால்களை அமைத்திருந்தனர். ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் அழகிய நாயகி, விமலா ரமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திதிருந்தனர்.