விவசாயி வீடு புகுந்து ரூ.1 லட்சம் நகை திருட்டு
சாத்தான்குளம் அருகே விவசாயி வீடு புகுந்து ரூ.1 லட்சம் நகை திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தை சேர்ந்த டேனியல் மகன் செல்வபிரபு(வயது39). விவசாயி.இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் தோட்டத்து வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து செல்வபிரபுவும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். பதறிப்போன அவர்கள் வீட்டுக்குள் சென்றபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.1.12 லட்சம் மதிப்பிலான நகை திருடப்பட்டு இருந்தது. பட்டப்பகலில் மர்ம நபர் நோட்டமிட்டு வீடுபுகுந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வபிரபு அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகிறார்.