தேவர்சோலை அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை முகாம்

தேவர்சோலை அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை முகாம்

Update: 2023-05-03 18:45 GMT

கூடலூர்

2023 - 24ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகனில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் தேவர்சோலை அருகே பாவனா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. தலைமை ஆசிரியை பங்கஜாட்சி, ஆசிரியை வாசுகி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரஞ்சிதா மற்றும் அனிதா, வனஜா, சுசீலா, ஆயிஷா, ஸசீரா ஆகியோர் முன்னிலையில் முதலாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முதலாவதாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் தலைவர் ரஞ்சிதா தன்னுடைய இரண்டாவது மகள் சஜிஷாவை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கிரீடம் அணிவித்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்பு கொடுத்தார்கள். மாணவர்களை அரசுப் பற்றியில் சேர்க்க பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையில் வகையில் வீடுகளுக்கு நேரில் சென்று சேர்க்கை பணிகளும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்