குழு அமைத்து விசாரிக்க வேண்டும்

குழு அமைத்து விசாரிக்க வேண்டும்

Update: 2023-03-27 10:03 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் கொமாரசாமி, துணை தலைவர் உள்பட 8 கவுன்சிலர்கள், குன்னத்தூர் செயல் அதிகாரியை கண்டித்து தங்கள் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு வந்த போலீசார் கருப்பு துணியை அகற்றி விட்டு மனு கொடுக்க அனுமதித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குன்னத்தூர் பேரூராட்சியின் வரவு-செலவு கணக்குகளை சில மாதங்களாகவே செயல் அதிகாரி மன்றத்தில் வைக்கவில்லை. இதுகுறித்து மன்ற கூட்டத்தில் முறையிட்டும் வைக்க மறுக்கிறார். கடந்த 3 மாதங்களாக வரவு செலவு கணக்குகளில் முறைகேடு நடந்து வருவதால் பேரூராட்சி கவுன்சிலர்களால் வரவு-செலவு கணக்கு அங்கீகரிக்கப்படவில்லை. செயல் அதிகாரி அவர் பணிக்கு வந்த 8 மாதங்களில் அளவுக்கு அதிகமான காசோலைகளை பயன்படுத்தி உள்ளார். தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் அளிப்பது இல்லை. மன்ற கூட்டம் எந்த தேதியில் நடத்துவது என்பது பற்றியும் இதுவரை தலைவரிடம் ஆலோசனை நடத்துவது இல்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார்.

இதுகுறித்து விசாரணை குழு அமைத்து முறைகேடு செய்யும் செயல் அதிகாரி, அலுவலக ஊழியர்களிடம் வீடியோ, ஆடியோ பதிவுடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்