வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

குலசேகரம் அருகே சரியான வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-22 18:45 GMT

குலசேகரம்:

குலசேகரம் அருகே சரியான வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயர்

குலசேகரம் அருகே உள்ள பிணந்தோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். லாண்டரி கடை நடத்தி வந்தார். இவருக்கு ராதா என்ற மனைவியும், ரெதீஷ்குமார்(வயது27) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு ராஜன் இறந்து விட்டார். இதையடுத்து என்ஜினீயரிங் பட்டதாரியான ரெதீஷ்குமார் சரியான வேலை கிடைக்காததால் குருந்தங்கோட்டில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரெதீஷ்குமார் அந்த வேலையை விட்டு நின்றுவிட்டார். மேலும், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கடந்த சில நாட்களாக ரெதீஷ்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இதற்கிடையே அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் தாயார் ராதா வெளியே கடைக்குச் சென்றார். வீட்டில் ரெதீஷ்குமார் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் ராதா வீட்டுக்கு வந்தார். அப்போது, ரெதீஷ்குமார் மாடிப்படிக்கட்டில் தூக்கில் பிணமாக தொடங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

பின்னர், இதுகுறித்து ரெதீஷ்குமாரின் தாயார் ராதா குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ரெதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேைல கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்