சைல்டுலைன் அமைப்பினரால் நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தம்: பிளஸ்-1 மாணவி திடீர் மாயம்

திருமண நிச்சயதார்த்தத்தை சைல்டுலைன் அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பிளஸ்-1 மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-10 19:25 GMT

நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 17 வயது பெண் ஒருவர் பிளஸ்-1 படித்து வருகிறார். அந்த மாணவி ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் மாணவியை கண்டித்ததாகவும் அதை பொருட்படுத்தாமல் அந்த மாணவி வாலிபருடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவிக்கு அவரது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த மாதம் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த சைல்டுலைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மாணவி மற்றும் அவரது தாயாரை புதுக்கோட்டையில் உள்ள சைல்டுலைன் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று 17 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்வது தவறு. 18 வயது ஆகும் வரை மைனர் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவி திடீர் மாயம்

இந்தநிலையில் வீட்டில் இருந்த மாணவி நேற்றுமுன்தினம் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி எங்கு சென்றார். அவரை வேறு யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது ேவறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்