வாலாஜா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
வாலாஜா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள் பல்வேறு ஊர்களுக்கு வேலைக்காக பஸ்களில் சென்று வருகின்றனர். பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இதனால் பொதுமக்கள், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.