பட்டியல் சமுதாய மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிலம் ஆக்கிரமிப்பா?-சிவகங்கை கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பட்டியல் சமுதாய மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிலம் ஆக்கிரமிப்பா?- சிவகங்கை கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2023-08-23 20:39 GMT


சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் பகுதியை சேர்ந்த ராஜகிரி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

என்னுடைய தந்தை ராணுவ வீரர். நானும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். ஆதிதிராவிட மக்கள் நலனுக்காக எனக்கு சொந்தமான நிலத்தை மயானம் அமைக்க வழங்கியுள்ளேன். அதேபோல, ஆதிதிராவிட மக்கள் பயன்பாட்டுக்காக அரசும் நிலங்களை ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர், பட்டியல் சமூக மக்களுக்காக அரசு ஒதுக்கிய இடத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட கலெக்டர், தாசில்தார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிப்பை அகற்றி ஆதிதிராவிடர்களின் பயன்பாட்டிற்க்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசரனைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, பட்டியலின மக்களுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். விசாரணை முடிவில், ஆக்கிரமிப்பு குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரனையை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்