ஊழலை ஒழிக்க சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஊழலை ஒழிக்க சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கு கையூட்டு பெற்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் செய்திகள் அதிகரித்து வருகின்றன. அரசு அலுவலகங்களிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் ஊழலை ஒழிக்க, சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்த அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது.
எனவே, தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.