ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்புடன் பட்டப்படிப்பு

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-05-26 19:00 GMT

மயிலாடுதுறைl

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.எச்.சி.எல். நிறுவனத்தில், 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பிலானி கல்லுரி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகம், அமிட்டி பல்கலைகழகம் மற்றும் நாக்பூரில் உள்ள ஐ.ஐ.எம். பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுதரப்படும் .12-ம் வகுப்பில் 2022 -ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சியில் சேர தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்