வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாம்

தெற்குகள்ளிகுளம் அய்யா வைகுண்டர் ஐ.டி.ஐ.யில் வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாம் நடந்தது.

Update: 2023-05-20 18:53 GMT

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் நாடார் மகாஜன சங்கம் அய்யா வைகுண்டர் ஐ.டி.ஐ-யில் வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாம் நடைபெற்றது. ஐ.டி.ஐ. புரவலர் எம்.ரோச் தலைமை தாங்கினார். நெல்லை வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் ஹரி பாஸ்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு தொழில்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். மேலும் ஐ.டி.ஐ. மாணவர்கள் தங்களது திறமைகள், தொழில்நுட்ப அறிவுத்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய விதங்கள் குறித்தும், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் மேம்பாடு குறித்தும் பேசினார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் பேசினார். முதல்வர் பாக்கியலெட்சுமி வரவேற்றார். ஆசிரியை எஸ்.ரோசி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்