வேலைவாய்ப்பு முகாமில் 25 பேருக்கு பணியாணை
திருப்பத்தூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 25 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் 6 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, செவிலியர், பொறியியல் படித்த 120 பேர் கலந்துகொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டார். முகாமில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.