தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

Update: 2023-02-15 18:45 GMT

தமிழக அரசின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தனியார்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து வருகின்றனர். முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைதேடும் நபர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் சுய விபர விண்ணப்பம், கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் அரசு துறை பணியிடங்களுக்கு பரிந்துரை செய்யப்படும். தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறலாம் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்