வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா என்னும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமினை வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ (டி.டி.யு.ஜி.கே.ஒய்) திறன் வளர்ப்பு கழகம் போன்றவை கலந்து கொண்டன. 500- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் முருகன், வாசுதேவநல்லூர் வட்டார இயக்க மேலாளர் போத்திராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், இசக்கியம்மாள், மகாராசி ஆகியோர் கலந்து கொண்டனர்.