ஓட்டல் அறையில் ஊழியர் தற்கொலை

ஓட்டல் அறையில் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2023-09-13 19:15 GMT

சிவகாசி

சிவகாசி தெற்கு தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் அபினேஷ் (வயது 21). இவர் சமையல் கலை படிப்பு படித்து முடித்து விட்டு சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இரவு நேரம் ஓட்டலின் மேல் அறையில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று ஓட்டல் மேல்அறையில் தங்கி இருந்த அபினேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் மணிமாலா சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்