பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

தூத்துக்குடியில் பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2023-02-19 18:45 GMT

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 40). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கிரஷர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அவர் எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே வந்த போது, பின்னால் வந்த அரசு பஸ் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராமகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்