பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஊர்வலம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனா்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை தாங்கினார். ஈரோடு காலைமாட்டு சிலை அருகில் தொடங்கிய ஊர்வலம் காந்திஜி ரோடு, கால்நடை மருத்துவமனை ரோடு வழியாக சென்று தாலுகா அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.