வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-10 19:15 GMT


பெரம்பலூர் மாவட்டத்தில், வட்டார இயக்க மேலாண்மை பிரிவில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கணினியில் 6 மாத கால சான்றிதழ் (எம்.எஸ்.ஆபிஸ்) பெற்றிருக்க வேண்டும். வயது உச்சவரம்பு 28 ஆகும். மேலும், இந்த திட்டம் தொடர்பான பணிகளில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய வட்டாரத்திற்குள் வசிப்பவராக இருத்தல் அவசியம். இந்த பணியிடத்திற்கான சம்பளமாக மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை, கலெக்டர் அலுவலகத்தை நேரில் அணுகவும். இந்த பணியில் சேர விருப்பமுடையவர்கள் வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்