மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

Update: 2023-06-21 18:45 GMT

கடலூர்

பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் அடுத்த ஆண்டு(2024) செப்டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க naanmudhalvan.tn.gov.in/tnskills என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு tnskills@naanmudhalvan வலைதளத்தில் பார்வையிடலாம். 10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக அடுத்த மாதம்(ஜூலை) 15-ந் தேதி நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். வயது வரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு 1.1.2002 அன்றும், அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடைவர்கள்.

பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக்கொண்டிருப்பவர்கள், பாலிடெக்னிக், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை, கலை மற்றும் அறிவியல், பள்ளி மாணவ-மாணவிகள், ஐ.டி.ஐ. படித்த, படிக்கும் மாணவ - மாணவிகள், தொழிற்சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகிய கால தொழிற்பயிற்சி பெற்றவர்கள்(பி.எம்.கே.வி.ஒய்) ஆகிய அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்