மதகொண்டப்பள்ளியில் ஏரியில் ஆனந்த குளியல் போட்ட யானைகள்

மதகொண்டப்பள்ளியில் ஏரியில் ஆனந்த குளியல் போட்ட யானைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Update: 2023-09-11 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கண்டகானப்பள்ளி ஏரிக்கு பின்புறம் நேற்று முன்தினம் 6 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. அந்த யானைகளை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையிலான வனத்துறையினர் விரட்டினர். அப்போது அங்கிருந்து வெளியேறிய யானைகள் நேற்று காலை மதகொண்டப்பள்ளி ஏரியில் தஞ்சமடைந்தன. அங்கு ஆனந்த குளியல் போட்டன.

தகவலறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் முரளிதரன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் யானைகளை கண்காணித்தனர். பொதுமக்கள் யானைகளை வேடிக்கை பார்க்க ஏரி அருகே திரண்டனர். அவர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் மதகொண்டப்பள்ளியை சுற்றியுள்ள 10 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

பகல் நேரத்தில் யானைகளை விரட்டினால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் மாலை வரை யானைகளை வனத்துறையினர் கண்காணித்தனர். அதன்பின் யானைகளை ஜவளகிரி வனப்பகுதியை நோக்கி வனத்துறையினர் விரட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்