யானைகள் தின விழிப்புணர்வு பேரணி

வால்பாறையில் யானைகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-08-12 14:26 GMT

வால்பாறை

வால்பாறையில் யானைகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

யானைகள் தினம்

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனத்துறையினர் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் மூலம் பொதுமக்களுக்கு யானைகளை பாதுகாப்பதை குறித்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை நகராட்சி ஆணையாளர் பாலு, கல்லூரி முதல்வர் செல்லமுத்துக்குமாரசாமி, வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழிப்புணர்வு

இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் யானை ஆராய்ச்சியாளர்கள் கணேஷ் ரகுராம், சம்பா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், வால்பாறை போலீசார், வனத்துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் வனத்துறையினர், யானை ஆராய்ச்சியாளர்கள் மாணவ-மாணவிகளுக்கு யானைகள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதில், யானைகளை பாதுகாப்பதன் அவசியம், அவற்றின் வாழ்விடங்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது, யானைகளுடன் இசைந்து வாழ பழகிக்கொள்வது, மனித-வனவிலங்கு மோதலை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்