கொசுக்கடி தாங்க முடியாமல் மலை அடிவார பகுதிக்கு யானைகள் படை எடுத்த வண்ணம் உள்ளன.

கொசுக்கடி தாங்க முடியாமல் மலை அடிவார பகுதிக்கு யானைகள் படை எடுத்த வண்ணம் உள்ளன.

Update: 2022-12-30 12:58 GMT

தளி

கொசுக்கடி தாங்க முடியாமல் மலை அடிவார பகுதிக்கு யானைகள் படை எடுத்த வண்ணம் உள்ளன.

யானை அட்டகாசம்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில் யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் அரிய வகை தாவரங்கள் உள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு பின்பு வனப்பகுதி முழுவதும் பசுமைக்கு மாறி உள்ளது. இதனால் அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.அதன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடந்த சில நாட்களாக யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக அடிவாரப் பகுதியை நோக்கி வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கடந்த சில நாட்களாக ஒன்பதாறு சோதனை சாவடி பகுதியில் தஞ்சம் அடைந்து உள்ளது. அந்த யானை வயல்வெளியின பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை சேதப்படுத்தி வருகிறது. மேலும் உடுமலை- மூணாறு சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளின் உபகரணங்களை உடைத்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள இளநீரை குலையுடன் உணவுக்காக தூக்கி சென்று விடுகிறது. அது மட்டுமின்றி கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித் திரியும் ஒற்றை யானை விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

கோரிக்கை

இதனால் வாகன ஓட்டிகள் விவசாயிகள் கடை உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அச்சமடைந்து உள்ளனர்.எனவே வனத்துறையினர் அடிவாரக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அதை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

----

Reporter : L. Radhakrishnan Location : Tirupur - Udumalaipet - Thali

Tags:    

மேலும் செய்திகள்