ஆசனூர் அருகே பஸ்சை வழிமறித்த யானைகள்; போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே யானைகள் பஸ்சை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-11-11 21:19 GMT

தாளவாடி

ஆசனூர் அருகே யானைகள் பஸ்சை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரும்பை ருசிக்க...

தாளவாடி அடுத்த ஆசனூரில் அடர்ந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தீவனம் மற்றும் தண்ணீரை தேடி காட்டுக்குள் இருக்கும் யானைகள் அடிக்கடி நெடுஞ்சாலைக்கு வந்து விடுகின்றன.

இதேபோல் அந்த வழியாக செல்லும் கரும்பு லாரி டிரைவர்கள், யானைகளுக்காக கரும்பு கட்டுகளை ரோட்டு ஓரத்தில் வீசிச்சென்று விடுகிறார்கள். இதனால் கரும்புகளை ருசிக்கவும் அடிக்கடி யானைகள் நெடுஞ்சாலைக்கு வந்துவிடுகின்றன.

பஸ்சை மறித்தது

இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் 3 யானைகள் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காத்திருந்தன.

அப்போது ஈரோட்டில் இருந்து மைசூரு நோக்கி ஒரு தனியார் பஸ் வந்தது. உடனே 2 யானைகள் ரோட்டின் நடுப்பகுதிக்கு சென்று பஸ்சை மறித்து நிறுத்தியது. பின்னர் பஸ்சின் மேல் பகுதி, முன்பக்க கண்ணாடியை கரும்பு உள்ளதா? என்று தடவிப்பார்த்தது.

அப்போது பஸ்சுக்குள் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டார்கள். சிலர் செல்போனில் படம் பிடித்தார்கள். சிறிது நேரம் கழித்து யானைகள் தானாக காட்டுக்குள் சென்றுவிட்டன. அதன்பின்னரே பஸ் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்