விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் யானை சுற்றித்திரிந்தது.

Update: 2022-10-21 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஒரு யானை முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த யானை மாரசந்திரம், லக்கசந்திரம், ஜார்க்கலட்டி, சீனிவாசபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானையால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்