தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, அருகே உள்ள கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து 7 காட்டு யானைகள் வெளியேறின. அவை அருகில் உள்ள நாட்றாம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தன. அங்கு ஜீவாநகரில் மாதையன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள ராகி பயிரை தின்றன. மேலும் கால்களால் அவற்றை மிதித்து சேதப்படுத்தின. பின்னர் அவை வனப்பகுதிக்குள் சென்றன. கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.