தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2023-09-12 18:45 GMT


நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொறுப்பாளர் ரவி தலைமை தாங்கினார். தொடக்க நிலை ஆசிரியர் சங்கங்களின் மாவட்ட செயலாளர்கள் பாலசண்முகம், அமிர்தலிங்கம், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கை விட வேண்டும். விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். வட்டார வள மையங்களுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் ஆசிரியர்களை கருத்தாளராக பயன்படுத்த கூடாது. 3 மாதங்களுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்