மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின்வாரிய ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை கருதி தமிழக அரசு உடனடியாக முத்தரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். 3 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியது போல் நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை திட்ட தலைவர் சுப்பராயலு தலைமை தாங்கினார். செயலாளர் சங்கரசுப்பு முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் ஆனந்த், மாநில துணைத்தலைவர்கள் கனிகுமார், ராஜமுருகன், பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.