பாலத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும்
பாலத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலவை அருகே வேலூர் மாவட்டத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தையும் பிரிக்கும் எல்லையாக கமலநதி உள்ளது. அந்த நதியின் குறுக்ேக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலம் வாழைப்பந்தல்- முனுகப்பட்டு கிராமங்களை இணைக்கும் மேம்பாலமாக உள்ளது. அந்தப் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் ெசல்வோர் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கமலநதி பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.