அம்மூரில் மின்சார பெருவிழா

அம்மூரில் நடந்த மின்சார பெருவிழாவ அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.

Update: 2022-07-29 17:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில், 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பாக ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின் சக்தி- 2047 என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தலைமை தாங்கினார். செயற் பொறியாளர்கள் குமரேசன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நோடல் அலுவலர் முரளி வரவேற்றார்.

மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் திட்ட விளக்க உரையாற்றினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பூங்கொடி, ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்