திருத்தணியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருத்தணியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் காஞ்சீபுரம் மின்பகிர்மான கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-08-14 06:35 GMT

திருத்தணி- அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காஞ்சீபுரம் மின்பகிர்மான கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் வரவேற்றார். கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதில், கே.ஜி.கண்டிகையை சேர்ந்த விவசாயிகள் எங்கள் பகுதியில் குறைந்த மின்அழுத்தம் வினியோகம் செய்யப்படுகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும், மும்முனை மின்சாரம் சீராக வழங்காததாலும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, கூடுதல் டிரான்ஸ்பார்ம்கள் அமைத்து சீரான மின்சாரம் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார். கூட்டத்தில், உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்