ரெயில் மோதி மின்வாரிய அலுவலர் பலி

விருதுநகரில் ரெயில் மோதி மின்வாரிய அலுவலர் பலியானார்.

Update: 2023-04-03 19:13 GMT


விருதுநகர் சூலக்கரை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). துலுக்கப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் கண்காணிப்பாளராக பணியாற்றினார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (40). போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.இந்தநிலையில் விருதுநகர்-அல்லம்பட்டி பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்ட மாரியப்பன் மீது தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி விருதுநகர் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்