தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை

தஞ்சையில் தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-08-23 21:04 GMT

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கேசவன்(வயது 22). எலக்ட்ரீசியனான இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த கேசவன் வீட்டில் யாரும் இல்லாபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கேசவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்