கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-12-05 19:14 GMT

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்ட கிளை சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும். அவுட் சோர்சிங் என்ற பெயரில் தனியார் மயத்தை புகுத்தக்கூடாது. ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஊழியர்களை பாதிக்கும் பி.பி.2-ஐ தொழிற்சங்கங்களிடம் ஒப்புக்கொண்ட படி திரும்ப பெற வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எஸ்.எல்.எஸ்.-ஐ உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கேங்மேன் ஊழியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் இட மாறுதல் உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்